| ||||||
பட்டுப்புழு: தாக்குதல்-மேலாண்மை |
||||||
பட்டுப்புழு ஊசி ஈ தாக்குதலும் மேலாண்மையும் மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பில் ஊசி ஈ என்ற ஒரு வகைப் பூச்சியினால் தாக்குதலால் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. ஒவ்வொரு 100 முட்டை (குவியல்) எண்ணிக்கை கொண்ட புழு வளர்ப்பிற்கும் சராசரியாக 10 கிலோ வரை பட்டுக்கூடு மகசூல் இழப்பு உண்டாகிறது. ஊசி ஈயின் தாக்குதல் குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகைய ஊசி ஈயானது டாக்னிட் வகையைச் சார்ந்தது. ஊசி ஈயின் மொத்த வாழ் நாட்கள் 14 முதல் 18 நாட்களாகும். இந்த ஊசி முட்டைப்பருவம் புழுப் பருவம். கூட்டுப்புழுப் பருவம், வளர்ச்சியடைந்த ஈ வருவம் ஆகும். நன்கு வளர்ச்சியடைந்த ஈ கரிய சாம்பல் நிறமுடையதாக இருக்கும். சாதாரண ஈயைவிட சற்று அளவில் பெரியதாக இருக்கும். பெண் ஈ தன் வாழ்நாளில் சுமார் 400 முதல் 500 முட்டைகள் வரை இடுகின்றது மற்றும் இது தோராயமாக ஒரு முட்டைக்குவியலை அழிக்கும் திறன் கொண்டது. ஒரு ஈயானது 2 அல்லது 3 முட்டைகளை பட்டுப்புழுவின் மீது மேற்புறம் மற்றும் இரு புறங்களில் இடும். இரண்டு நாட்களில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்து பட்டுப்புழுவின் தோலை துளைத்து உட்செல்லும், ஈயின் புழுப்பருவம் 4 முதல் 6 நாட்களாகும். நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் பட்டுப்புழுக்களிலிருந்து வெளிவந்து கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுப் பருவம் 8 முதல் 12 நாட்கள் ஆகும். ஊசி ஈயின் முட்டை மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடையது. 2 லிருந்து 3 நாட்களில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவரும். அப்புழுக்கள் பட்டுப்புழுவின் உடலை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடும். ஊசி ஈ துளைத்துச் சென்ற இடத்தில் பட்டுப்புழுவின் மீது ஒரு கரிய புள்ளி ஏற்படும். புழு உள்ளே வளர, வள கரும்புள்ளியும் பெரியதாகிக் கொண்டே வந்து ஒரு கரிய வடுவாக ஆகிவிடுகின்றது. பட்டுப்புழுவின் தோலின் கீழேயே முதல் இரண்டு பருவங்களும் வாழ்கின்றன. மூன்றாம் பருவப்புழு நகர்ந்து பட்டு உற்பத்தியாகும் சுரப்பியைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளையும் தின்று விடும். நன்கு வளர்ந்த பின் புழு தன் வாயில், உள்ள கொக்கி போன்ற உறுப்புக்களால், பட்டுப்புழுவை துளைத்துக்கொண்டு வெளிவருகிறது.
வெளியேறிய புழுக்கள் வளர்ப்பறையிலுள்ள இருட்டான பகுதிக்கு சென்று சுவர் ஓரங்களிலுள்ள துளைகளில் கூட்டுப் புழுவாக மாறும். கூட்டுப்புழுவின் தோற்றம் சற்றே நீண்டசதுரமாகவும், செம்பழுப்பாகவும் இருக்கும். இதன் நிறம் அடர் பழுப்பிலிருந்து, கரிய நிறமாக மாறும். இவற்றிலிருந்து வெளி வந்த ஊசி ஈக்கள் 5 முதல் 6 நாட்கள் வரை வாழும். மேலும் இவை 4 கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும். ஊசி ஈ நன்கு வளர்ந்த 4 அல்லது 5வது பருவப் பட்டப்புழுக்களைத் தாக்குதின்றது. பட்டுப்புழுக்கள் 3.4 அல்லது 5வது பருவத்தின் தொடக்கத்தின் தாக்கப்பட்டால் கூடு கட்டுவதற்கு முன்பே பட்டப்புழுவின் உடலைத் துளைத்துக் கொண்டு புழு வெளிவருகின்றது. இதனால் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. 5வது பருவத்தின் கடைசியில் ஊசி ஈயின் தாக்குதல் ஏற்பட்டால் பட்டுப்புழு மிகவம் வலிவுற்ற கூட்டினைக் கட்டும். ஊசிப்புழு பட்டுக்கூட்டுகளை விட்டு வெளி வருவதால் துளைக்கப்பட்ட கூடு ஏற்படுகின்றது. இவற்றை நூற்பது மிகவும் கடினம்.
|
||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |
||||||